செய்திகள்

தரம் 01 அனுமதி தொடர்பில் முறைப்பாடுகள்!

2020ஆம் ஆண்டிற்கான தரம் (1) ஒன்றுக்கான அனுமதி தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக பலர் எமக்கு முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 10 அல்லது 11 பேர்வரை கல்வித்திணைக்களம், 2019 டிசம்பர் மாத ஆரம்பத்தில் வெளியிட்ட அனுமதிப் பட்டியலில் தமது பிள்ளைகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் 2019.12.31ஆம் திகதி இரண்டாவது பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டபோது தங்களது பிள்ளைகளது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி தாங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடசாலைக்குச் சென்று அனுமதியை உறுதி செய்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

சிலர் தமது விண்ணப்பத்தில் தெரிவுசெய்த இரண்டு பாடசாலைகளின் பட்டியல்களிலும் தமது பிள்ளையின் பெயர் காணப்பட்டபோது அதில் ஒன்றினைக் கைவிடுவதாக அறிவித்தும் உள்ளனர். அப்படியானவர்கள் இரண்டு பாடசாலைகளையும் இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

முதலாவது பட்டியலில் அனுமதி வழங்கப்பட்டபோது அந்தந்த விண்ணப்பங்கள் முறையானவை என்று ஏற்றுக்கொண்டு அனுமதியளித்த கல்வித் திணைக்களம், வருடக் கடைசியில் ஏதோ காரணத்துக்காக அந்தப்பெயர்களை நீக்குவதானது எங்கேயோ தவறு நடந்துள்ளமையைக் காட்டுகின்றது.

குறித்த பாடசாலைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தமது பிள்ளைகளுக்குத் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்து முடித்தபின்பு அதனை நிராகரிப்பது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் ஆழமான ஏமாற்றத்தைப் பதிவு செய்வதாகவும், அவர்களது மனோநிலையைப் பாதிப்பதாகவும் அமையும். இவை எமது சமூக வளர்ச்சிக்குக் குந்தகமாகவே காணப்படும்.

ஏதோ காரணங்களுக்காக சிலரின் பெயர்களை உள்ளடக்கவேண்டிய தேவை பின்னர் ஏற்பட்டிருப்பின், ஏற்கனவே பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீக்காமல் நடவடிக்கை
எடுத்திருக்க வேண்டும். அவர்கள் கோராத பாசாலைக்கு சேர்க்கிறோம் என்றால் விண்ணப்ப முறைமையே கேள்விக் குறியாகி விடுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் எவரையும் பாதிக்காத வகையில் தீர்மானம் அவசியமாகின்றது. அந்த வகையில் முதலாவது பட்டியலில் அனுமதி வழங்கப்பட்டவர்களை அப்படியே தொடரவிட்டு, புதிதாக உள்ளடக்கப்பட்டவர்களை ஒரு விசேட காரணியாக மேலதிக அனுமதியாக வழங்கி பிரச்சனைக்குத் தீர்வ காணமுடியும் எனக் கருதப்படுகின்றது.

எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டவர்களின் மிகவும் வலுவான குறைபாடு உடனடியாக நிவர்த்தி செய்யப்படுதல் வலியுறுத்தப்படுகின்றது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினராக மைத்திரி?

reka sivalingam

துஷார செவந்தியிடம் 6 மணி நேரம் சிஐடியினர் விசாரணை!

Tharani

குமார வெல்கம புதுக் கட்சி தொடங்கினார்!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.