செய்திகள்

கூட்டுத்தாபன தலைவர்களின் சம்பளம் குறைப்பு

அரச நிறுவனங்கள் மற்றும் நிறைவேற்று குழுக்களின் தலைவர்களின் மாதாந்த கொடுப்பனவினை 1 இலட்சம் ரூபாய் வரை வரையறுத்து ஜனாதிபதி செயலாளரால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிரூபத்துக்கு அமைய குறித்த தலைவர்களுக்கு உத்தியோகப்பூர்வ வாகனம் ஒன்று மாத்திரமே வழங்கப்படும்.அத்துடன், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த உறுப்பினர்களுக்கு உத்தியோக பூர்வ வாகனங்களை வழங்க வேண்டாம் என, ஜனாதிபதி செயலாளர் ஆலோசனை கூறியுள்ளார்.அரச செலவீனத்தை குறைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய ஜனாதிபதி செயலாளரால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பூஜித் தொடர்பான விசாரணை நிறைவு

reka sivalingam

நாட்டுக்கு முதலீட்டின் ஊடாக பொருளாதாரத்தை வலுவூட்டல்

Tharani

மாஸ்டரில் மீசை வழித்த கெட்டப்பில் விஜய்

Bavan

Leave a Comment