செய்திகள்யாழ்ப்பாணம்

தலைவலியால் பெண் மரணம்!

தலைவலியால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
சிரேஸ்குமார் ஞானசீலி (வயது-37) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாள்களாக இவர் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார் என்றும், சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994