கிழக்கு மாகாணம் செய்திகள்

தவறான முடிவால் உயிரை மாய்த்த சிறுமி!

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் 15 வயது சிறுமியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (31) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெல்லாவெளி, காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாக்கியராஜா மேனகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி, சம்பவதினமான நேற்று இரவு, சுமார் 10 மணியளவில் தனது படுக்கையறைக்கு சென்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டபோது, அதனை கண்ட தாயார் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி, தனது பாடசாலை ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லையென திட்டியதாகவும் அதனால் தனக்கு வாழ விருப்பமில்லை எனவும் கடிதம் எழுதிவைத்து விட்டு, தற்கொலை செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

அம்பன் சூறாவளி; வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவிப்பு!

Tharani

முதியவர் அடித்து கொலை; ஒருவர் கைது

G. Pragas

பிக் மச்சில் கலந்து கொண்டோரை தனிமையாகுமாறு கோரிக்கை!

G. Pragas