பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், சிறுப்பிட்டி நீர்வேலியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இதே பகுதியைச் சேர்ந்த சுதாகரன் விந்தியா (வயது -16) என்பவரே தவறான முடிவெடுத்தவராவார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை மேற்கொண்டார்.