in ,

தான் பிரசவித்த சிசுவை உயிரோடு புதைக்க முயன்ற தாய்!

மட்டுவிலில் சம்பவம் ,பேர்த்தியாரும் கைது!

பெற்றெடுத்த குழந்தையை குழிதோண்டிப்புதைக்க முற்பட்ட குற்றச்சாட்டில், அந்தக் குழந்தையின் தாயாரும் பேர்த்தியாரும் கைதுசெய்யப்பட்டனர். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம், மட்டுவில் வடக்கில் நேற்றுஅதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

18 வயதுடைய பெண், திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாகியதால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் குழந்தை பிரசவமானதும் குழந்தையைப் புதைக்க முற்பட்டுள்ளனர் என்று ஆரம்ப விசாரணையைக்கொண்டு பொலிஸார் கூறினர்.

நேற்றுஅதிகாலை குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தையைப்புதைக்கும் கைங்கரியம் மும்முரமாக இடம்பெறுவதை அவதானித்த அயலவர்கள், சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி சுகாதார மருத்துவஅதிகாரி மற்றும் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குழந்தையை உயிருடன் மீட்டு சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்னர் தாயும் சேயும் மேலதிக சிகிச்சைக்காக விசாரணைக்காகவும் யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூநகரி கடலில் சடலம் மீட்பு!

புலிகளின் ஆயுதங்கள் மந்துவிலில் மீட்பு!