செய்திகள்பிரதான செய்தி

தாமரைக்கோபுரத்தில் அடுத்த மாதம் முதல் வர்த்தக முதலீடுகள்

கொழும்பு மத்திய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரம் அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் வர்த்தக முதலீட்டாளர்கள் பாவனைக்குத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவின் 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி 2012ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சுமார் 7 வருடங்களில் தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டது.

356 மீற்றர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே மிகப் பெரிய கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19 ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்கிறது.

இந்தநிலையில் வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளவும் முதலீட்டு வாய்ப்புகளுக்காகவும் தற்போது இந்தக் கோபுரத்தைத் திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களைப் பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214