செய்திகள்

தாயை கொலை செய்தமை உறுதி; மகன், பேரனுக்கு விளக்கமறியல்

ஹட்டன்- வட்டவளை, விக்டன் கீழ் பிரிவில் வசித்த, 84 வயதுடைய வள்ளியம்மா ராக்காயின் மரணம் கொலையென, பிரேத பரிசோதனையை மேற்கொண்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட நீதிமன்ற வைத்தியர் இனோகா ரத்னாயக்க இன்று (16) தெரிவித்தார்.

துணி நாடாவொன்றில் இந்தத் தாயின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பிரேத பரிசோதனையை முன்னெடுத்த வைத்தியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி குறித்த தாய் அவரது மகன், பேரப்பிள்ளை ஆகியோரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், 13ம் திகதி அவர்களின் வீட்டின் பின்புறமாகவுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கொழும்பு ஆமர்வீதி விடுதியொன்றிருந்து மகனும், பேரப்பிள்ளையும் கைதுசெய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து, கொல்லப்பட்ட பெண்ணின் மகனை இந்த மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலிலும் பேரனை 23ம் திகதி வரை பேராதனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் தடுத்து வைக்குமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சஞ்சீவ பொன்சேகா உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

​பிரேத பரிசோதனையின் போது, இச்சம்பவம் கொலையெனப் பதிவாகியுள்ளதால், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கொரோனாவை விரட்ட பாடல்: பாடியது யார் தெரியுமா?

Tharani

யுத்தத்தின் மூன்று கட்டங்களை நானே வெற்றி கொண்டேன் – சந்திரிகா

G. Pragas

மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா

reka sivalingam