உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்தி

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

தாய்லாந்து நோங் பூவா லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 2 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் மதிய உணவுவேளையில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த மர்மநபர் முன்னாள் பொலிஸ் எனவும் போதைப்பொருள் விவகாரத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் எனவும் விசாணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றவாளியை உடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாய்லாந்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த சந்தேகநபர் தனது மனைவி, குழந்தையை சுட்டு கொலை செய்துவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266