செய்திகள்

தாறுமாறாக ஏறியது எரிபொருள் விலை!

நேற்று நள்ளிரவு தொடக்கம் பெற்றோல் உட்பட எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, பெற்றோலியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்ரைன் 92 வகை பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. (20 ரூபாவால்) ஒரு லீற்றர் ஒக்ரைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக அதிகரித்துள்ளது. (23 ரூபாவால்)

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரித்துள்ளதுடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக (15 ரூபாவால்) அதிகரித்துள்ளது.

இதேவேளை மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக (10  ரூபாவால்) அதிகரிக்கப்பட்டுள்ளது – என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941