in ,

தா.பாண்டியன் மரணம்!

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தா. பாண்டியன் நேற்று 88 வயதில் காலமானார்.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இந்திரா காந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்த பாண்டியன் ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் இடம்பெற்ற போது மொழிபெயர்ப்பாளராக பங்குகொண்டிருந்த நிலையில் படுகாயம் அடைந்திருந்தார்.

விடுதலைப்போராட்டம் தொடர்பிலான கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்த அவர்,

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்நாட்களில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக மாறியிருந்தார்.

1 கிலோ ஹெரோயின், மில்லியன் பணத்துடன் பெண் கைது!

இனி யாழ் போதனாவுக்கு ஒரு பார்வையாளர் மட்டுமே செல்லலாம்!