கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

திகாமடுல்லயில் சஜித் அணியை தவிர எவரும் வெல்ல முடியாதாம்; கருணா உட்பட – இவ்வாறு கூறுகிறார் மன்சூர்

கருணா எனும் வி.முரளிதரனுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.ஐ.மன்சூர் தெரிவித்தார்.

நேற்று (29) இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

‘தமிழ் மக்களைப் பொறுத்தளவில் கருணா தனித்துவமான ஒரு காட்சியிலே போட்டியிடுகின்றார். அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.

எதுவாயினும் தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு ஆறுதலான தமிழ் மகன் ஒரு பிரதிநிதியாக இருக்கின்ற விடயத்தில் மிக கவனமாக இருப்பார்கள் என நம்புகின்றேன்.

கருணா கூட இந்த தேர்தலில் தோற்கடிக்கப்படுவார். அவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த சிறுபான்மை கட்சி சார்பாக களம் இறங்கியிருக்கின்ற எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பெறாமல் தோல்வி அடைவார்கள். அந்த வகையில் அவர்களுக்கு அளிக்கும் எந்த ஒரு வாக்கும் பிரயோசனம் அற்றது.’ – என்றார்.

Related posts

சாதியம் பேசும் திரௌபதி படத்தின் ட்ரெய்லர்

Bavan

தே.அ.அட்டை விநியோகத்திற்கு குறுந்தகவல் சேவை

reka sivalingam

பாலியல் துஷ்பிரயோகம்; இருவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை

G. Pragas