இந்திய செய்திகள் செய்திகள்

திகார் சிறையில் சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார் சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று அடைக்கப்பட்டார்.

ஐ.என்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், சிதம்பரம், திஹார் சிறை செல்வதை தடுக்கும் பொருட்டு, அவரது வழக்கறிஞர் குழுவினர் தீவிர முயற்சி செய்தனர்.
ஆனால், சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், ” வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டும், குற்றத்தின் வகையை ஆராய்ந்தும், ஆரம்ப கட்ட நிலையில் விசாரணை உள்ளதால், குற்றவாளியை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதேவேளை இன்றுதான் சிதம்பரத்தின் பிறந்ததினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா

reka sivalingam

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்!

G. Pragas

விமான நிலைய பிசிஆர் சோதனையை அதிகரிக்க உத்தரவு!

G. Pragas