செய்திகள்

திடீரென இறந்து விழும் காகங்கள் !

மரங்களில் இருக்கும் காகங்கள் திடீரென இறந்து விழுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காகங்கள் இறப்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி, வெலிகந்தை, நெலும்வெவ ஆகிய கிராமங்களில் இன்று (16) காலை முதல் காகங்கள் அதிகளவில் இறந்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமாக இறக்கும் காகங்கள் பிரதேசத்தில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதாகவும் மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகங்களுக்கு தேங்காய் பால் கொடுத்து அவற்றின் உயிர்களை காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் கிராமவாசிகள் கூறியுள்ளனர்.

Related posts

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

reka sivalingam

கொரோனா தொடர்பில் அனைத்து வகையிலும் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Tharani

சி.ரி ஸ்கானர் ஆரம்பித்து வைக்கப்பட்டது

G. Pragas