கிழக்கு மாகாணம் செய்திகள்

திடீரென புகுந்த கடல் நீர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் சீரற்ற நிலையில் இருப்பதன் காரணமாக சில பகுதிகளில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பின் கல்லடி தொடக்கம் நாவலடி வரையிலான கடற்கரையினை அண்டிய பகுதிகளில் இன்று (13) காலை கடல் நீர் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்துள்ளது.

அத்துடன், கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின் வலைகள் சேதமடைந்துள்ளதுடன் வள்ளங்களும் சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தடீரென கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் நாவலடிப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உப்பு, கடல் நீர் புகுந்ததன் காரணமாக கரைந்து போயுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ஐதேக உறுப்பினரை தாக்கிய பெரமுனக் கட்சியினர் ஐவர் கைது

G. Pragas

யாழில் இராணுவம் கைது செய்த 41 பேர் விடுதலை!

G. Pragas

‘எழுக தமிழ்’ ஆரம்பம்!

G. Pragas