செய்திகள் பிரதான செய்தி

திடீர் நோய் ; 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக இன்று (14) காலை கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் வகுப்பறை ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மாணவர்களின் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் ஏற்பட தொடங்கியதன் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, 12 மாணவர்களும் மற்றும் 3 மாணவிகளும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி காமினி மத்துமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்-அமெரிக்கா

reka sivalingam

எம்சிசி ஒப்பந்த கைச்சாத்து பொய் – மறுக்கிறார் பந்துல

G. Pragas

மின்கம்பியில் சிக்கி பாதுகாப்புப் படை வீரர் பலி!

Tharani