செய்திகள் பிரதான செய்தி

திருகோணமலை பொதுச் சந்தை வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


திருகோணமலை ஐக்கிய பொதுச் சந்தை வளாகத்தில் வாராந்த சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (02) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சந்தை வர்த்தகர்களினாலேயே, எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கோஷங்களை எழுப்பியவாறும், பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறும்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இதன்போது கூடியிருந்த வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினரால் திருப்பியனுப்பப்பட்டனர்.

வாராந்த சந்தை ஆரம்பிக்கப்பட்டதன் ஊடாக, தமக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படுவதாக கூறியே, மத்திய சந்தை வர்த்தகர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது 

Related posts

ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!

G. Pragas

விசேட பணியாற்றும் பொலிஸாருக்கு கொடுப்பனவு; அரசு முடிவு!

Bavan

பண்பாட்டு பெரு விழாவும் விருது வழங்கலும்

G. Pragas