கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

திருக்கேதீஸ்வரம் ஆலய வளைவு உடைப்பு வழக்கு ஒத்திவைப்பு

திருக்கேதீஸ்வரம் ஆலய வளைவு உடைப்பு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

திருக்கேதீஸ்வர ஆலய வளைவு அண்மையில் சிலரால் இடித்து வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, அதனை செய்தவர்கள் மற்றும் அங்கு நந்திக் கொடியை மிதித்ததாக கூறப்பட்டவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை அனுமதியில்லாமல் நுழைவாயில் வளைவை கட்டினார்கள் என திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகக் குழுவினருக்கு எதிராக இன்னுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளும் நேற்று (04) நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எச்.எம்.அப்துல்லா முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது சட்டத்தரணி சுமந்திரன் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையின் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணனின் பெயர் இணைக்கப்பட்டிருக்கும் விதத்தை ஆட்சேபித்து வாதாடினார்.

அதன்பின்னர் வழக்கு விசாரனை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், பொலிஸார் இன்னும் விசாரணைகளை முடிக்கவில்லை என்ற காரணத்தினாலும் தேர்தல் சம்பந்தமாக விசேட சேவைக்கு சென்றிருப்பதாக கூறியதாலும் குறித்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

கலைப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் சாதனை

Bavan

கிழக்கின் நிர்வாகத்தை பாதுகாக்க கோத்தாவை ஆதரிக்க வேண்டும்

G. Pragas

அரசியல் தீர்விற்கு மைத்திரியே தடை – விஜயகலா

G. Pragas

Leave a Comment