செய்திகள் பிரதான செய்தி

திருட்டுப்படகில் ஹெரோயின் வாங்கி வந்த மூவர் கைது!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் நீர்கொழும்பு களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகொன்றை திருடி அதில் களவாடப்பட்ட படகு எஞ்சின் ஒன்றைப் பொருத்தி நீர்கொழும்பு எமில்டன் வாவி ஊடாக கொழும்பு பேலியாகொடை பெரிய பாலம் வரையில் சென்று மட்டக்குளியில் போதைப் பொருளை வாங்கி வந்த மூன்று நபர்களை நீர்கொழும்பு – துங்கல்பிட்டிய பொலிஸார் நேற்று (08) மாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்து 15 கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வீதி நிர்மாணிப்பில் மோசடி

கதிர்

ஜனாதிபதி பெயரை பயன்படுத்தி நிதி மோசடி; இருவர் கைது

Tharani

யாழ்ப்பாணம் ரஹ்மான் ஹோட்டலில் கரப்பான் பூச்சி பிரியாணி!

Bavan