கிழக்கு மாகாணம் செய்திகள்

திருமலையில் “நந்திக்கடல் பேசுகிறது” நூல் அறிமுகம்

ஊடகவியலாளர் ஜெரா தம்பியினால் தொகுக்கப்பட்ட “நந்திக்கடல் பேசுகிறது” ஆவண நூல் கடந்த (20) அன்று திருகோணமலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

புழுதி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம், அகரம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன.

அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வின் தலைமையை புழுதி அமைப்பைச் சேர்ந்த கோபகன் வழங்கினார். திருமலை மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய அருட்திரு கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களுக்கான சிறப்புப் பிரதி வழங்கலுடன் காரண உரைகள் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு சிரட்டைகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

Related posts

கோரிக்கை விடுத்ததால் தேர்தலில் குதித்தேன் – சிவாஜி

G. Pragas

டெங்கினால் பாடசாலை மூடப்பட்டது

G. Pragas

தமிழர் பகுதிகளுக்குள் மீளவும் இராணுவ சோதனை சாவடிகள்

G. Pragas

Leave a Comment