செய்திகள் பிந்திய செய்திகள் மன்னார்

திருமலையில் 2,145 வீடுகளை மக்களிடம் கையளிக்க உத்தேசம்!

திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடம் 2,145 வீடுகளை, மக்கள் பாவனைக்குக் கையளிக்க உத்தேசித்துள்ளதாக, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் என்.திருக்குமார் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 2015ம் ஆண்டு தொட்கம் இவ்வாண்டு வரைக்கும் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக 8,001 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

இவ்வருடம் மாத்திரம் 78 மாதிரிக் கிராமங்களை உருவாக்கும் செயற்றிட்டங்கள் திட்டங்கள் நடைபெற்றுகிறது. இவற்றில் 2,145 வீடுகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளோம். இதுவரையில் 950 வீடுகள் பூர்த்தியடைந்துள்ளது. இவ்வருட இறுதிக்குள் அனைத்து வீடுகளும் மக்களிடம் கையளிக்கும் வகையில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கிறோம். – என்றார். (சூ)

Related posts

பூஸா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம்

G. Pragas

தீவிரவாத கோரிக்கைகளை நிறைவேற்ற கோத்தாபய தயாரில்லை

G. Pragas

பாகிஸ்தான் அணியை வெள்ளையடிப்புச் செய்தது இலங்கை!

G. Pragas