கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

திருமலை அரச அதிபர் கடமையேற்றார்!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தரம் 1ஐச் சேர்ந்த ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன, தமது கடமைகளை இன்று (14) மாவட்டச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

இவர் மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையேற்க முன்னர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கடற்றொழில் மற்றும் மீன்பிடி அமைச்சின் மேலதிகச் செயலாளர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளையும் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கரந்தாய் விபத்தில் இருவர் பலி!

G. Pragas

வீரவன்சவும், பங்காளிகளும் எமது உறவுகளை புதைத்த இடத்தை சொல்ல வேண்டும்! – சுகாஷ்

Tharani

தர்பார் படத்தின் மற்றொரு புதிய போஸ்டர்

Bavan