கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

திருமலை காட்டுப் பகுதியில் சடலம் மீட்பு!

திருகோணமலை – ரொட்டவெவ காட்டுப் பகுதியில் நேற்று (15) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த உக்குனைதேகே சைமன் அப்பு (70 வயது) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ மற்றும் புலியகுளம் காட்டுப்பகுதியில் சடலம் கிடப்பதை அவதானித்த இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அரச இருப்பிலுள்ள நெற்தொகை சந்தைகளுக்கு விநியோகம்

Tharani

காற்றாலை அமைக்கும் பணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- அடிதடியில் முடிந்தது

Tharani

பிரேஸிலில் மண்சரிவு: 23 பேர் பலி!

reka sivalingam

Leave a Comment