இந்திய செய்திகள்செய்திகள்

திரெளபதி முர்முக்கு ரணில் வாழ்த்து

இந்தியாவின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக நேற்றுமுன்தினம் பதவியேற்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவும் இலங்கையும் பல்லாயிரம் ஆண்டுகளாக நீண்டகால உறவை பேணி வருகின்றது.

நாம் பகிர்ந்துகொள்ளும் மூலோபாய நலன்களின் பல துறைகளில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரும் திரெளபதி முர்முக்கு வாழ்த்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051