கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

திலீபனின் நினைவேந்தலை கிளி. நீதிமன்றமும் தடை செய்தது!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திலீபனின் நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த நிகழ்வுகளை நேற்று முன் தினம் (15) யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றே கிளிநொச்சியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு நேற்று (16) சென்ற கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறிதரன் எம்பியிடம் கட்டளையை வழங்கியுள்ளார்.

ஏ.ஆர். 1304 /20 என்ற வழக்கின் பிரகாரம் 15-9-2020 தொடக்கம் 28-09-2020 வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வையும் அல்லது ஊர்வலங்கள் கூட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

5-வயது சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேக நபர் கொலை!

G. Pragas

சதமடித்த தனஞ்சய டி சில்வா

Tharani

புதிய அரசாங்கம் புத்தாண்டை சுபீட்சத்தின் ஆண்டாக மாற்றம்!

Tharani