கட்டுரைகள்சிறப்புக் கட்டுரைநடுப்பக்க கட்டுரைபிரதான செய்தி

திலீபனுடன் எட்டாம் நாள் 22.09.1987

22.09.1987

இன்று அதி­கா­லை­யிலே நிரஞ்­சன் குழு­வி­னர் கொட்­டகைபோடும் வேலையை ஆரம்­பித்­து­விட்­ட­னர். முதல்நாள் இலட்­சக் க­ணக்­கான மக்­கள் வந்­தி­ருந்­த­தால் போடப்­பட்­டி­ருந்த கொட்­ட­கை­கள் எல்­லாம் சனக்­கூட்­டத்தால் நிரம்பி வழிந்­தன. உண்­ணா­வி­ர­தம் ஆரம்­பிக்­கும்­போது இத்­தனை சனக்­கூட்­டம் வரு­மென யாருமே எதிர்­பார்க்­க­வில்லை.

இலங்­கை­யில் மட்­டு­மன்றி, இந்­தியா மற்­றும் பல வெளி­நா­டு­க­ளில்கூட திலீ­ப­னின் தியா­கப் பய­ணம் பற்­றியே மக்­கள் பெரும்­பா­லா­னோர் பேசிக்­கொண்­டி­ருப்­ப­தா­கப் பத்­தி­ரி­கை­க­ளில் போட்­டி­ருந்­தார்­கள்.

அத்­து­டன் தமி­ழீ­ழத்­தின் பல பாகங்­க­ளி­லும் பர­வ­லாக மக்­கள் அடை­யாள உண்­ணா­வி­ர­தங்­களை மேற்­கொண்டு தம் எழுச்­சி­யைக் காட்­டிக்­கொண்­டி­ருந்­த­னர். மட்­டக்­க­ளப்பு மாந­க­ரில் ‘மதன்’ என்ற இளம் தள­பதி ஒரு­வர், மக்­க­ளின் ஆத­ர­வு­டன் தன் போராட்­டத்தை திலீ­ப­னின் வழி­யில் இன்­னும் இரண்டு நாள்­க­ளில் ஆரம்­பிக்­க­வி­ருப்­ப­தாக என்­னி­டம் மாத்தையா கூறி­னார்.

இந்த மத­னைத் தெரி­யா­த­வர்­களே மட்­டக்­க­ளப்­பில் இல்லை. 1985ஆம் ஆண்டு நான் இந்­தி­யா­வில் இருந்­த­போது மதன் தமி­ழீ­ழத்­துக்­குச் சென்­றார். பல போர்க்களங்­களை தன் இளம் வய­தில் சந்­தித்­தார். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத் தள­பதி கரு­ணா­வு­டன் சேர்ந்து திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள குச்­ச­வெ­ளிப் பொலிஸ் நிலை­யத்தை தகர்த்­த­வர்­க­ளுள் இந்த மத­னும் ஒரு­வர். இந்த குச்­ச­வெ­ளிப் பொலிஸ் நிலை­யத் தாக்­கு­தல்­க­ளில் முக்­கியமாகப் பங்­கெ­டுத்­த­வர்­கள் வேறு யாரு­மல்ல, லெப்­டி­னன்ட் கேர்­ணல் சந்­தோ­ஷம், லெப்­டி­னன்ட் கேர்­ணல் கும­ரப்பா, லெப்­டி­னன்ட் கேர்­ணல் புலேந்­தி­ரன் ஆகி­யோர்­தான்.

தமி­ழீ­ழத்­தின் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லேயே திருச்­செல்­வம் என்ற போரா­ளி­யும், அவ­ரு­டன் சேர்ந்து பல பொது­மக்­க­ளும், உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்தை நாளை தொடங்­க­வி­ருப்­ப­தா­கச் செய்­தி­கள் வெளி­வந்­தன. தமி­ழீ­ழம் எங்­குமே அஹிம்­சைப்­போர் தீப்­பி­ழம்­பாக எரிந்­து­கொண்­டி­ருக்­கி­றது. திலீ­பன் ஒரு மகத்­தான மனி­தன்­தான். இல்­லை­யென்­றால் அவன் வழி­யி­லேயே இத்­தனை மக்­கள் சக்­தியா…!

© © © © ©

வல்­வெட்­டித்­து­றை­யிலே திலீ­ப­னுக்கு ஆத­ர­வாக உண்­ணா­வி­ர­தம் இருக்­கும் ஐந்து தமி­ழர்­க­ளைத் தலை­வர் பிர­பா­க­ரன் நேரில் சென்று சந்­தித்­த­போது எடுக்­கப்­பட்ட படத்­தை­யும், திலீ­ப­னின் படத்­தை­யும், பத்­தி­ரி­கை­க­ளில் அரு­க­ருகே பிர­சு­ரித்­தி­ருந்­தார்­கள். ஈழ­மு­ரசு பத்­தி­ரி­கை­யில் திலீ­ப­னுக்கு அடுத்த மேடை­யிலே சாகும்வரை (நீரா­கா­ரம் அருந்­தா­மல்) உண்­ணா­வி­ர­தம் இருந்து கொண்­டி­ருக்­கும் திரு­மதி நல்­லையா, செல்வி குக­சாந்­தினி, சிவா துரை­யப்பா ஆகி­யோ­ரின் படங்­க­ளைப் போட்­டி­ருந்­தார்­கள்.

மொத்­தத்­தில் எல்­லாமே திலீ­ப­னின் அஹிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்­டிக்­கொண்­டி­ருந்­தன. பத்­தி­ரி­கை­க­ளில் வெளி­வ­ரும் செய்­தி­கள் மட்­டுமன்றி, ஒவ்­வொரு ஊரி­லி­ருந்­தும் பல பொது­சன அமைப்­பு­க்கள் அணி­யாக வந்து உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தில் பங்­கு­பற்­று­வ­தோடு திலீ­ப­னுக்­காக கவிதைவடி­வில் ஆயி­ரக்­க­ணக்­கான துண்­டுப்பிர­சு­ரங்­க­ளை­யும் அச்­ச­டித்து விநி­யோ­கித்து வந்­தன.

இந்த எழுச்­சியை, மக்­க­ளின் வெள்­ளத்­தை பார்ப்­ப­தற்கு என்றே தின­மும் யாழ்ப்­பாண நக­ரத்­தைச் சுற்­றிச்­சுற்றிவட்­ட­மிட்­டுக் கொண்­டி­ருந்­தன இந்­திய சமா­தா­னப் படை­யின் ஹெலி­கொப்­டர்­கள்.

புலி­கள் ஆயு­தப் போராட்­டத்­தில் மட்­டு­மல்ல, அஹிம்­சைப் போராட்­டத்­தி­லும் சாதனை படைக்­கும் திறன் பெற்­ற­வர்­கள் என்ற பேருண்மை, உல­கம் முழு­வ­தும் பர­விக்­கொண்­டி­ருந்­தது. திலீ­ப­னின் சாதனை உலக அரங்­கிலே ஒரு சரித்­தி­ர­மா­கிக் கொண்­டி­ருக்­கி­றது. உல­கி­லேயே முதன்முத­லாக ஒரு சொட்­டு­நீர்கூட அருந்­தா­மல் சாகும்வரை உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்தை ஆரம்­பித்து ஏழு நாள்­களை வெற்­றி­க­ர­மாக முடித்­த­வர் என்ற பெரு­மை­யு­டன் அதோ கட்­டி­லில் துவண்டு வதங்கி, உறங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றார் திலீ­பன். அவ­ரது கண்­கள் இரண்­டி­லும் குழி­கள் விழுந்­து­ விட்­டன. முகம் சரு­கைப்­போல் காய்ந்து கிடக்­கி­றது. தலைமயிர்­கள் குழம்­பிக் கிடக்­கின்­றன. வயிறு ஒட்­டி­விட்­டது.

நீரின்றி வாடிக்­கி­டக்­கும் ஒரு கொடி­யைப் போல் வதங்­கிக் கிடக்­கின்­றார். அவ­ரால் விழி­க­ளைத் திறக்க முடி­ய­வில்லை, பார்க்கமுடி­ய­வில்லை, பேச முடி­ய­வில்லை, சிரிக்க முடி­ய­வில்லை. தூங்க மட்­டும்­தான் முடி­கி­றது. இன்­னும் எத்­தனை நாள்­க­ளுக்­குத்­தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்­கப்­போ­கி­றது? முர­ளி­யின் பொறுப்­பி­லுள்ள மாண­வர் அமைப்­பைச் சார்ந்த மாணவ, மாண­வி கள் சனக்­கூட்­டத்­தைப் கட்­டுப்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். மக­ளிர் அமைப்பு உறுப்­பி­னர்­கள், சனங்­களை வழி­ந­டத்­திக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

© © © © ©

பக்­கத்து மேடை­யிலே நிகழ்ச்­சி­கள் ஆரம்­ப­மா­கி­விட்­டன. பெரும்­பா­லா­னோர் அழு­த­ழுது கவிதை படிக்­கின்­றார்­கள். ‘சிந்­திய குரு­தி­யால் சிவந்த தமிழ் மண்­ணில் சந்­ததி ஒன்று சரித்­தி­ரம் படைக்க….. முந்­தி­டும் என்­ப­தால்… முளை­யிலே கிள்­ளிட… சிந்­தனை செய்­த­வர் சிறு­ந­ரிக் கூட்­ட­மாய்… இந்­தி­யப் படை­யெ­னும் பெய­ரு­டன் வந்­தெம் சந்­தி­ரன் போன்ற திலீ­ப­னின் உயி­ரைப் பறித்­திட எண்­ணி­னால்… பாரிலே புரட்சி… வெடித்­தி­டும்.. என்று வெறி­யு­டன் அவர்­களை… எச்­ச­ரிக்­கின்­றேன்…’’ மேடை­யிலே முழங்­கிக் கொண்­டி­ருந்த இந்த கவிதை என் மனத்­திலே ஆழ­மாகப் பதி­கி­றது.

இன்று திலீ­ப­னின் உடல்­நிலை மிக­வும் மோச­மா­கி­விட்­டது என்­பதை அவ­ரின் வைத்­தி­யக் குறிப்­பு­கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. இரத்த அழுத்­தம் – 80/50. நாடித்­து­டிப்பு – 140. சுவா­சம் – 24.
.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214