கட்டுரைகள்சிறப்புக் கட்டுரைநடுப்பக்க கட்டுரைபிரதான செய்தி

திலீபனுடன் 7ஆம் நாள் (21.09.2022)

21.09.1987
இன்று காலை­யில் எழுந்­த­தும் முதல் வேலை­யாக யோகியை என் கண்­கள் தேடின. நேற்­றைய பேச்­சின் முடிவு என்­ன­வாக இருக்­கும்…? இந்­தக் கேள்­வி­தான் இத­யத்­தின் பெரும் பாகத்தை அரித்­துக்­கொண்­டி­ருந்­தது. முற்பகல் 10 மணி­வரை எவ்­வ­ளவோ முயன்­றும் அவர்­கள் என் கண்­க­ளில் பட­வே­யில்லை. ஆனால், திடீ­ரென்று ‘இந்­தியா டுடே’ பத்­தி­ரிகை நிரு ப­ரும், இந்­திய தூர்­தர்­ஷ­னின் (இந்­தி­யத் தொலைக்­காட்சி ஸ்தாப­னம்) வீடியோ படப்பிடிப்­பா­ள­ரும், யோகி­யு­டன் வந்து திலீ­பனை படம்­பி­டிக்­கத் தொடங்­கி­னர்.

‘இந்­தியா டுடே’ நிரு­பர் என்­னி­டம் திலீ­ப­னின் உடல்­நி­லை­யைப்­பற்றி துரு­வித்துருவிக் கேட்­டுத் தெரிந்து கொண்­டார். என்­னால் முடிந்­த­வரை முதல் நாள் உண்­ணா­வி­ர­தத்­தி­லி­ருந்து இன்­று­வரை அவ­ரின் உட­லில் நிகழ்ந்த மாற்­றங்­கள் அனைத்­தை­யும் விரி­வாக எடுத்­துக் கூறி­னேன்.

அவர்­கள் சென்­ற­பின் யோகியை அழைத்து, என் மன­துக்­குள் குடைந்­து­கொண்­டி­ருந்த அந்­தக் கேள்­வி­யைக் கேட்­டே­விட்­டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்­சி­யைத் தந்­தது. இந்­திய அமைதி காக்­கும் படை­யின் மூத்த தள­பதி ஒரு­வ­ரும், பிரி­கே­டி­யர் ராக­வன், எயர் கொமாண்­டர் ஜெயக்­கு­மார், கடற்­படைத் தள­பதி அப­ய­சுந்­தர் ஆகி­யோ­ரும் வந்து பேசி­னர் எனவும், உத­வித்­தூ­து­வர் வர­வில்லை என்­றும், திலீ­ப­னின் பிரச்சி­னை­யில் அவர்­கள் ஒரு தீர்க்­க­மான முடிவை இது­வரை எடுக்­க­வில்லை என்­றும் யோகி கூறி­னார். அந்­தப் பதி­லைக் கேட்­ட­தால் அதை ஜீர­ணிக்க என் மன­துக்கு வெகு­நே­ரம் பிடித்­தது.

அந்தப் பேச்சு பற்­றிய முழு விவரத்­தை­யும் யோகி திலீ­ப­னி­டம் விளக்­கிக்­கூறி, என்ன செய்­ய­லாம்…? என்று கேட்­டார். பேசச் சக்தி­யற்று, நடக்­கச் சக்தி­யற்று துவண்டு கிடந்த அந்­தக் கொடி, தன் விழி­க­ளைத் திறந்து பார்த்­து­விட்டு வழக்­கம் போன்­று­தன் புன்­ன­கையை உதிர்த்­தது. ‘‘எந்த முடி­வும் நல்ல முடி­வாக இருக்கவேணும். ஐந்து கோரிக்­கை­க­ளை­யும் நிறை­வேற்­று­வ­தாக அவர்­கள் எழுத்­தில் தரவேணும். இல்­லை­யெண்­டால், நான் உண்­ணா­வி­ர­தத்­தைக் கடைசி வரைக்­கும் கைவி­ட­மாட்­டன்’’ ஒவ்­வொரு வார்த்­தை­யாக கர­க­ரத்த குர­லில் வெளி­வந்­தது திலீ­ப­னின் பதில்.

© © © © ©

பட­ப­ட­வென்று நடுங்­கிய குர­லில், மெது­வா­கத் திட­மா­கத் திலீ­பன் கூறி­மு­டித்­த­போது யோகி மேடை­யில் இருக்­க­வில்லை. யாழ்ப்­பா­ணக் குடா­நாடு விடு­த­லைப் புலி­க­ளின் முழு­மை­யான கட்­டுப்­பாட்­டுக்­குள் 1985ஆம் ஆண்­டின் இறு­திப்­ப­கு­தி­யில் வந்த பின்­னர் அர­சி­யல் பிரி­வுப் பொறுப்­பா­ள­ராக திலீ­பன் இருந்து மிகச் சிக்­க­லான பிரச் சினை­க­ளை­யெல்­லாம் பொது­மக்­கள் மத்­தி­யில் தீர்த்து வைத்­தி­ருக்­கின்­றார்.

1986ஆம் ஆண்டு அச்­சு­வே­லி­யில் ஏற்­பட்ட ஒரு­சிறு பூசல் கார­ண­மாக மினி­பஸ்­க­ளின் சொந்­தக்­கா­ரர்­கள் ஒரு­வா­ர­கா­ல­மாக பஸ்­களை ஓட­வி­டா­மல் வழி­ம­றிப்­புப் போராட்­டம் நடத்­தி­ய­தால் மக்­கள் மிகுந்த துன்­பப்­பட்­ட­னர். திலீ­பன் தனக்­கே ­யு­ரிய புன்­மு­று­வ­லு­டன் அவர்­களை அணுகி மிக­வும் எளி­மை­யாக அவர்­க­ளு­டன் பேசி இரண்டு மணித்­தி­யா­லத்­தில் பஸ்­களை ஓடச்­செய்­தார். யாழ்ப்­பாண மாவட்ட மீன­வர்­க­ளுக்கு இடையே நடை­பெ­றும் பூசல்­கள், கடல் எல்­லை­யில் ஏற்­ப­டும் பிரச்சி­னை­ மற்­றும் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடையே ஏற்­ப­டும் சில சிக்­க­லான பிரச்சி­னை­க­ளை­யெல்­லாம் பொது­மக்­கள் மத்­தி­யில் தீர்த்து வைத்­தி­ருக்­கின்­றார். பல்­க­லைக்கழ­கத்­தில் ஏற்­ப­டும் சிக்­க­லான பிரச்சி­னை­கள், கடை முத­லா­ளி­கள் – தொழி­லா­ளி­க­ளின் பிரச்சினை­கள், மூடை தூக்­கு­வோர், வண்டி ஓட்­டு­வோர் – ரக்­சிக்காரர்­கள், மாந­க­ர­சபை ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள், எழுதுவினை­ஞர்­கள், மருத்­து­வர்­கள், தாதி­மார், மருத்­து­வ­மனை சிற்­றூ­ழி­யர்­கள், வழக்­க­றி­ஞர்­கள், லொறிச் சொந்­தக்­கா­ரர்­கள் இப்­ப­டிப் பல தரப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளை­யெல்­லாம் உட­னுக்­கு­டன் பேசிச் சம­ர­ச­மாகத் தீர்த்து வைத்­த­வர் திலீ­பன்.

யாழ்ப்­பா­ணக் கரை­யோ­ரக் கிரா­ம­மான நாவாந்­து­றை­யில் தமி­ழர்­க­ளுக்­கும் முஸ்­லிம்­க­ளுக்­கும் இடை­யில் பல­மான இனக்­க­ல­வ­ரம் ஏற்­பட்­டது. கத்­தி­கள், பொல்­லு­கள், கைக்­குண்­டு­கள், துப்­பாக்­கி­கள் எல்­லாம் தாரா­ள­மாக பாவிக்­கப்­பட்­டன. ஒரேநாளில் பலர் இரு­பக்­கத்­தி­லும் மாண்­ட­னர். பலர் படு­கா­ய­முற்­ற­னர். திலீ­பன் தன்­னந்­த­னி­யாக இரு சமூ­கத்­த­வர்­க­ளை­யும் இர­வோடி இர­வாகச் சென்று சந்­தித்­தார். முடிவு? அடுத்த நாள் பெரு­மழை பெய்து ஓய்ந்­த­து­போல் கல­வ­ரம் நின்­று­விட்­டது.
தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்கு தமி­ழீழ மக்­கள் மத்­தி­யில் மாபெ­ரும் செல்­வாக்கு இருப்­ப­தற்கு கார­ணம், இவர்­கள் சிங்­கள இரா­ணு­வத்­தின் அட்­டூ­ழி­யங்­க­ளி­லி­ருந்து தம் உயி­ரையே அர்ப்­ப­ணித்து மக்­களைக் காப்­பாற்­று­வ­து­டன், எந்­தச் சிக்­க­லான சமூ­கப் பொரு­ளா­தா­ரப் பிரச்சி­னை­யா­னா­லும் புலி­க­ளின் அர­சி­யல் பிரி­வுத் தலை­வர் திலீ­ப­னால் அவை நிச்­ச­ய­மாகத் தீர்க்­கப்­ப­டும் என்ற உயர்ந்த நம்­பிக்­கை­யா­லும் ஏற்­பட்ட செல்­வாக்­குத்­தான் அது. மற்­ற­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தில் இரவுபக­லாக உறங்­காது வேளா­வே­ளைக்கு உண­வின்றி அய­ராது உழைப்­ப­தில் திலீ­ப­னுக்கு நிகர் திலீ­பன்­தான்.

அவர் சுய­மாக எப்­போ­தா­வது மினுக்­கிய மடிப்­புக் கலை­யாத ஆடை­கள் அணிந்­த­தை­யும் நான் பார்த்­த­தில்லை. அவ­ரி­டம் இருப்­ப­தெல்­லாம் ஒரே­யோரு நீள­காற்­சட்டை (ட்ரவு­சர்) ஒரே­யொரு சேர்ட் தான். அர­சி­யல் விச­ய­மாக ஊரெல்­லாம் சுற்றி பல பிரச்சி­னை­க­ளைத் தீர்த்­து­விட்டு, காய்ந்த வயிற்­று­டன் இரவு 12.00, 1.00 மணிக்கு தலைமை அலு­வ­ல­கத்துக்கு வரு­வார். அந்த நள்­ளி­ர­வில் அழுக்­கே­றிய தன் உடை­க­ளைக் களைந்து தேய்த்து காயப்­போட்­டு­விட்டே படுக்­கச் செல்­வார். பின்­னர் அந்த இயந்­தி­ரம் அதி­கா­லை­யி­லேயே தன் இயக்­கத்தை மீண்­டும் ஆரம்­பித்து விடும். இப்­ப­டிப்­பட்ட திலீ­பன் இன்று வாடி, வதங்கி தமி­ழி­னத்­துக்­காக தன்­னையே அழித்­துக் கொண்­டி­ருக்­கின்­றாரே? எத்­த­னையோ பேரின் பிரச்­சி­னையை, தீர்த்து வைத்த இவ­ரின் பிரச்­சி­னையை, தமி­ழி­னத்­தின் பிரச்­சி­னையை யார் தீர்க்­கப் போகின்­றார்­கள்?

© © © © ©

சீல­முறு தமி­ழன் சிறப்பினை இழப்­பதோ?

சிங்­கள இனத் தவர் நம்மை மிதிப்­பதோ?

கோல­முறு திரு நாடி­னிக்

கொள்­ளை­யர் விரித்த வலை­யி­னில்

வீழ்ந்து அழி­வதோ?

கால­னெ­னும் கொடும் கய­வ­னின் கையி­னால்…

கண்ணை இழந்து நாம் கவ­லை­யில் நலி­வதோ?

நீல­ம­ணிக்­க­டல் நித்­த­மும் அழு­வதோ…?

நாடு பெறும்­வரை நம்­மி­னம் தூங்­குமோ?

‘ஈழ­மு­ரசு’ பத்­தி­ரிகை­யில் வெளி­வந்த இந்­தக் கவி­தையை ஒரு­நாள் திலீ­பன் வாசித்­து­விட்டு என் தோள்­க­ளைத் தட்­டிப் பாராட்­டி­யதை இன்று எண்­ணிப் பார்க்­கி­றேன். வாராவாரம் பத்­தி­ரி­கை­க­ளில் வெளி­வந்து கொண்­டி­ருக்­கும் எனது கவி­தை­களை ஒரு தொகுப்­பாக்கி வெளி­விட வேண்­டும் என்­பது திலீ­ப­னின் ஆசை.

தலை­வர் பிர­பா­க­ரன் ‘முன்­னுரை’ எழு­த­வேண்­டும் என்ற என் விருப்­பத்தை திலீ­ப­னி­டம் வெளி­யிட்­ட­ போது, அவ­ரும் அதற்கு சம்­ம­தித்­தார். உண்­ணா­வி­ர­தம் முடிந்த பின் முதல் வேலை­யாக தலை­வ­ரி­டம் சகல கவி­தை­க­ளை­யும் கொடுக்க வேண்­டும் என்று தீர்­மா­னித்­துக்­கொண்­டேன். தலை­வர் பிரபா ஓர் இலக்­கிய ரசி­கன் என்­பது பல­ருக்கு தெரி­யாது. அந்த நெஞ்­சுக் கூட்டுக்குள் நிறைந்து கிடக்­கும் ராணு­வத் திட்­டங்­க­ளும், அர­சி­யல் புரட்­சிக்­க­ருத்­துக்­க­ளும், இலக்­கிய குவி­யல்­க­ளும் மலை போன்ற தமி­ழு­ணர்­வும்… அப்­பப்பா! ஏரா­ளம்… ஏரா­ளம்…. அப்­ப­டிப்­பட்ட தலை­வ­னின் வழி­வந்த திலீ­ப­னின் ஏழாம் நாள் தியா­கப் பய­ணம் தொடர்­கின்­றது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214