விளையாட்டு

தீக்‌ஷனவின் தெரிவால் திண்டாடும் சி.எஸ்.கே.!! – வைரலாகும் #BoycottCSK ஹேஷ்டேக்!!

ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை வீரர் மஹீஸ் தீக்‌ஷனவைத் தெரிவு செய்த காரணத்துக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் புறக்கணிப்போம் என ரசிகர்கள் பலரும் டுவீற்றரில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

2013 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்றன. ஐ.பி.எல் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் போட்டியை நடத்த விட மாட்டோம் எனச் சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.

அதையடுத்து, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கொண்ட அணியை விளையாட அனுமதிக்க மாட்டோம் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தாா்.

அதையடுத்து ஐ.பி.எல் நிர்வாகக் குழு உள்ளூர் மக்களின் உணவுர்பூர்வமான விடயத்துக்கு மதிப்பளித்து, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் எந்த அணி சார்பிலும் இலங்கை அணி வீரர்கள் விளையாட மாட்டார்கள் என அறிவித்தது.

சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனவை 70 இலட்சம் ரூபாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவு செய்துள்ளது.

சி.எஸ்.கே அணியின் இந்தச் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து #BoycottCSK என்கிற ஹேஷ்டேக்குடன் பலரும் ட்விட்டரில் எதிர்ப்புப் பதிவுகள் எழுதியுள்ளார்கள். இதனால் #BoycottCSK என்கிற ஹேஷ்டேக் டுவீற்றரில் பிரபலமாகி வருகின்றது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282