கிழக்கு மாகாணம் செய்திகள்

தீயில் எரிந்து இளைஞன் மரணம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி அறபாநகர் பிரதேசத்தில் தீக்காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இன்று (04) அதிகாலை மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

நாவலடி அறபாநகர் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் கட்டட வேலைகளை பார்ப்பதற்காக கஸ்ஸாலி வீதி, பெரியநீலாவணை மருதமுனையைச் சேர்ந்த முகஹமட் மீரான் மின்ஹாஜ் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அரசாங்கத்தினால் அறபாநகர் பிரதேசத்தில் எழுபத்தைந்து வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில் குறித்த நபருக்கான வீடு ஒன்றும் உள்ளது. இவ்வீட்டு வேலைகளை பார்ப்பதற்காக மருதமுனையில் இருந்து அறபாநகர் பிரதேசத்திற்கு வருவது வழக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமை மருதமுனையில் இருந்து வருகை தந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த பிரதேசத்தினை சேர்ந்த நபருக்கும் இவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராரில் ஏற்பட்ட சண்டையே பொதுமக்கள் பிரித்து விட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அழுகுரல் கேட்டு அயலவர்கள் சென்ற வேளை தீயில் எரிந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலையில் உயிரிழந்துள்ளர்.

குறித்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார். (NK)

Related posts

இலங்கையர்கள் இருவருக்கு “பத்ம ஸ்ரீ” விருது!

G. Pragas

சிறுவனை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

Tharani

பொகவந்தலாவயில் தீ; மூன்று ஏக்கர் நாசம்!

reka sivalingam