செய்திகள் பிந்திய செய்திகள்

தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மஹிந்த

தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

மக்கள் இன்று வறுமை மற்றும் ஏழ்மையில் சிக்கி தவிக்கின்றனர். சிறந்த வேலைத் திட்டங்கள், சிறந்த நோக்கம், சிறந்த இலக்கு, வேலை செய்ய முடியும் என நிரூபித்த ஒருவராலேயே அது சாத்தியமாகும்.

அனைவரின் சம்மத்துடனேயே கோட்டாபய ராஜபக்ஷவை நாம் ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தோம். தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க நாம் யோசித்தோம். அதற்காகவே நாம் அவரை வேட்பாளராக நியமித்தோம்.

பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இது தொடர்பாக நன்கு அறிந்த ஒருவராலேயே இதனை செயற்படுத்த முடியும். கோத்தாபய ராஜபக்ஷ தவிர்ந்த வேறு எவருக்கும் அதனை செய்ய முடியாது – என்றார்.

Related posts

ஒருமித்தநாடு ஒருமைப்பாடு என்ற விடயத்தை உருவாக்குவேன் – முல்லையில் சஜித்

G. Pragas

மன்னாரில் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

G. Pragas

நாடாளுமன்றின் சிறிய நிலப்பரப்பு சரிந்தது

G. Pragas

Leave a Comment