செய்திகள் மலையகம்

தீ விபத்தில் அச்சகம் நாசமானது

நுவரெலியா – புஸ்ஸலாவ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அச்சகம் ஒன்று முற்றாக எரிந்து அழிவடைந்துள்ளது.

நேற்று (25) இடம்பெற்ற இந்தத் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை எனவும் பொருட்களே முற்றாக எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச பொதுமக்கள் இணைந்து ஏனைய கடைகளுக்குப் பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. மின்சார ஒழுக்கு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Related posts

சந்திரிகாவுடன் இணைந்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் – தயாசிறி

G. Pragas

இருதய நோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்

G. Pragas

நாமலின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

reka sivalingam