செய்திகள் பிரதான செய்தி வவுனியா

தீ வைக்கப்பட்ட பெண் 25 நாட்களின் பின் பலி!

தீக்காயங்களுக்கு வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண்ணொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 8ம் திகதி, வவுனியா – ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது தீ வைத்து எரிக்கப்பட்ட குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் 25 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி!

admin

ஒலிம்பிக் தொடரை ஒத்திவைக்க நடவடிக்கை?

Tharani

விசுவமடுவில் பேருந்து மோதி மாணவி படுகாயம்!

G. Pragas