கிழக்கு மாகாணம் செய்திகள்

துஆ பிரார்த்தனையும் உலருணவு வழங்கலும்

கொரோனாவில் இருந்து மக்களையும் பாதுகாப்பதற்காகவும், நாட்டில் கொரோனாவை இல்லாமல் செய்வதற்கு பாடுபட்டு வரும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறையினர் மற்றும் சுகாதார துறையினர் ஆகியோருக்கு தேகாரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று விஷேட துஆ பிரார்த்தனை இன்று (09) இடம்பெற்றது.

கோளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் கிராமத்தில் அமைந்துள்ள இமாம் ஜஃபர் ஸாதிக் சமூக சேவைகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எல்.ரீ.எம்.ஹலீம் தலைமையில் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

இதன்போது கோளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் கிராமத்தில் வாழும் அனைத்து சமூக மக்கள் இருநூற்றி ஐம்பது பேருக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. (150)

Related posts

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

Tharani

துப்பாக்கிகளை லோட் செய்து அச்சுறுத்தினர்- சிவாஜி தெரிவிப்பு

reka sivalingam

கோதுமை மாவின் இறக்குமதி வரி குறைப்பு

Tharani