செய்திகள் பிராதான செய்தி

துப்பாக்கி சூட்டில் இரு பொலிஸார் காயம்!

மாத்தறை – அக்குரச, திப்பட்டுவாவ சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (06) அதிகாலை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேககத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு பணித்துள்ளனர். இதன்போது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சிறை சென்று பிள்ளையானை நலம் விசாரித்தார் மஹிந்த

G. Pragas

கோத்தாவிற்கு எதிரான மனுவை நிராகரித்து தீர்ப்பு!

G. Pragas

கோரிக்கைகளை கைவிட்டு கோத்தாவை ஆதரியுங்கள்- வரதர்

G. Pragas

Leave a Comment