இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

“துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்” – நடிகை அக்‌ஷரா கவுடா

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், ஹரிஸ் ஜெயராஜின் இசையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி.

இந்தப் படத்தில் ஹிந்தி நடிகை அக்‌ஷரா கவுடா சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சமீபத்தில் அவர் அளித்த நேரலைப் பேட்டியில், ” ‘துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘துப்பாக்கி’ படம் தொடர்பாக அக்‌ஷரா கவுடா பேட்டியில் கூறியிருப்பதாவது:

” ‘துப்பாக்கி’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளர். அந்தச் சமயத்தில் ஹிந்தியில் ‘நாடோடிகள்’ றீமேக் படப்பிடிப்பும் இருந்தது. அதற்கும் சந்தோஷ் சிவன்தான் ஒளிப்பதிவாளர். அப்போதுதான் ‘துப்பாக்கி’ காட்சி குறித்து தெரிவித்து 2 மணி நேரம் தான் படப்பிடிப்பு என்று நடிக்க அழைத்தார் சந்தோஷ் சிவன்.

மொழி தெரியாது. ஆனாலும் நடித்துக் கொடுத்தேன். விஜய், காஜல் அகர்வால் ஆகியோருடன் நடிக்கும் போதெல்லாம், அவர்கள் இவ்வளவு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் தெரியாது. ஆனாலும், விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோருக்காக மட்டுமே நடித்தேன். அதைத் தாண்டி அப்படி என்ன பெரிய கதாபாத்திரத்தில் நான் நடித்துவிட்டேன். அதில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். யாருடன் நடித்தேன் என்பதைச் சொல்லவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை மட்டும் சொல்கிறேன்”. என்று சொல்லியுள்ளார் அக்‌ஷரா கவுடா.

Related posts

4286 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

G. Pragas

கருத்து முரண்பாட்டால் கொலை -கொட்டாவையில் சம்பவம்

reka sivalingam

அக்கராயனின் போதைப் பொருளுக்கு எதிராக போராட்டம்!

G. Pragas