கொழும்பு துறைமுக நகரில் செல்பி மற்றும் தனிப்பட்ட காணொலிகள் எடுப்பதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று கொழும்பு துறைமுக நகரத் திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரத்தில் தனிப்பட்ட நிகழ்வுகள், வணிகப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.