in ,

துவிச்சக்கர வண்டியை வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளை திருடிய நபர் குறித்த விசாரணை

துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நபர் ஒருவர், துவிச்சக்கர வண்டியை வைத்து விட்டு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லா பிச்சை வீதியில் வைத்தே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவரின் சைக்கிளே திருடப்பட்டுள்ளது. குறித்த துவிச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரியா-நடேஸ் குடும்பம் தடுப்பு முகாமிலிருந்து விடுதலை

எரிவாயு விலை ரூ.400ஆல் அதிகரிக்க கோரிக்கை