in ,

துறைமுக சட்டம் தொடர்பான விசாரணை நிறைவு – முடிவு விரைவில்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 மனுக்கள் மீதான விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இதன் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (23) ஐந்தாவது நாளாக உயர் நீதிமன்றில் இடம்பெற்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

புதையல் நாணயம் விற்க முயன்றவர் கைது!

புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு!