in

தூங்கிய காவலர்கள் தப்பித்தனர் கைதிகள்!

தூங்கிய காவலர்கள் தப்பித்தனர் கைதிகள்!

சிறைக்காவலர்களின் தூக்கத்தைப் பயன்படுத்தி, பலத்த பாதுகாப்பு நிறைந்த இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து பலஸ்தீனத்தை சேர்ந்த 6 சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இஸ்ரேலில் கில்போவா என்ற இடத்தில் அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையை இஸ்ரேல் அமைத்துள்ளது. அங்குதான் கைது செய்யப்படும் பலஸ்தீனர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.

இங்கு சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் 6 பேர் கடந்த இரு நாள்களுக்கு முன்னர், சுரங்கம் ஒன்றைத் தோண்டி அதன் வழியாக தப்பித்துச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பலஸ்தீனப் போராளிக்குழுவொன்றைச் சேர்ந்த முக்கியமான தலைவராவார்.
இது குறித்து இரகசியக் கமராப் பதிவுகளை பரிசோதனை செய்தபோது, சிறைக்காவலர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் சமயத்திலேயே சுரங்கத்தை தோண்டி, தப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறைக்காவலர்கள் கூண்டோடு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்கானில் தலிபான்களின் இடைக்கால அரசாங்கம்!

வாட்டும் வெப்பத்தால் கருகித் துடிக்கும் சீனா!