உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கொரியாவில் இருந்து நாடு திரும்புபவர்களை கண்காணிக்க நடவடிக்கை!

தென் கொரியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தென்கொரியாவிலிருந்து வருபவர்களிடம் பிரத்தியேக மருத்துவ பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் தற்பொழுது 20 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருவதுடன் மாணவர்கள் சிலரும் உயர்கல்விக்காக அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா அச்சத்தால் அவர்கள் நாடு திரும்பி வருவதாகவும், வாரம் இரண்டு விமானங்கள் தென் கொரியாவிலிருந்து இலங்கை வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க கூறினார்.

இதனால் இவ்வாறு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

இதேவேளை தென்கொரியாவிற்கான இலங்கை தூதரகம் 24 மணித்தியால அவசர தொலைபேசி சேவையை நடைமுறைப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்றகமைய தென் கொரியாவில் உள்ள இலங்கையர் 00822-735-2966, 0082-2-735-2967, 0082-2-794-2968 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவிற்கும் பரவியது கொரோனா வைரஸ்

Tharani

அரச திணைக்களங்களில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு!

Tharani

யானைகள் அட்டகாசத்தால் மக்கள் பாதிப்பு!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.