செய்திகள்

கொரியா உள்ளிட்ட நாட்டு பயணிகளை தனிமைப்படுத்த தீர்மானம்

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று (03) காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். 

மேலும் , இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் இந்த செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் . 

இதற்காக சிறிது காலம் தேவை என்றும் குறித்த பகுதியை இனங்காண குறிப்பிடத்தக்க சில காலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்த அனில் ஜாசிங்க அநேகமான வெளிநாட்டவர்கள் ஒரே நேரத்தில் வருகை தந்தால் அவர்கள் அனைவரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். 

இதன் காரணமாக வெளிவிவகார அமைச்சின் ஊடாக தூதரகங்கள் மற்றும் நாடுகளுக்கு அறிவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும், அதனூடாக எதிர்வரும் நாட்களில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வரும் கப்பல்களின் பயணிகளுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் முன்னெடுப்போம் – அதிபர் சங்கம்

reka sivalingam

தைப்பொங்கல் அன்று சம்பள உயர்வு குறித்து நற்செய்தி – ஆறுமுகம்

G. Pragas

மோசமான ஊழல்வாதி ரணில்! மைத்திரி காட்டம்

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.