in , ,

தென்னை உற்பத்தி பயன்களை அதிகரிக்க இளைஞர்களே முன்வாருங்கள் – அருந்திக

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கைதடியில் அமைந்துள்ள பனை மற்றும் தென்னை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து அலுவலகத்தினை பார்வையிட்டார்.

இதேவேளை தும்பு உற்பத்தி தொடர்பான தொழிற்சாலை அமைத்து தருமாறு ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அருந்திக, அதனை அமைத்து தருவதாக உறுதிமொழி அளித்தார்.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு வரிகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க முடியும் என தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை முழுவதும் 13 சதவீதமான தென்னைகள் காணப்பட்ட போதும் அதில் மூன்று வீதமான தென்னை உற்பத்தியில் இருந்து பயன்களை பெற முடிகிறது எனவும் இளைஞர்கள் முயற்சி செய்தால் தென்னை பனை சார் உற்பத்திப் இருந்து அதிக பயனைப் பெற முடியும் எனவும் அருந்திக குறிப்பிட்டார்.

கூட்டமைப்பை விட்டு சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்!

யாழில் 8 பேர் உட்பட வடக்கில் இன்று 20 பேருக்கு உறுதி!