செய்திகள்யாழ்ப்பாணம்

தென்மராட்சியில் குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!! – ஒரே நாளில் நடந்த சோகம்!!

தென்மராட்சியில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

மட்டுவில் கிழக்கு, இல்வாரையில் உள்ள குளத்தில் மூழ்கி 72 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டுவில் கிழக்கைச் சேர்ந்த கிருஸ்ணன் சரஸ்வதி (வயது-72) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

இவரது மகனுக்கு நேற்றுமுன்தினம் திருகோணமலையில் திருமணம் நடந்துள்ளது என்றும், இவர் நேற்று இல்வாரை வைரவர் ஆலயத்துக்குச் சென்றபோது, ஆலயத்தின் முன்னுள்ள குளத்தில் தவறி வீழ்ந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவர்கள், சடலம் மிதப்பதைக் கண்டு உறவினர்களுக்கு அறிவித்துடன், சடலத்தையும் மீட்டுள்ளனர். இவரது உடல் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொரோனாத் தொற்றுன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மிருசுவிலில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி 68 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் மீட்கப்பட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282