in

தென்மராட்சி பிரதேச செயலக பொதுமக்கள் சேவை நிறுத்தம்!!

தென்மராட்சி பிரதேச திட்டமிடல் அலகில் மேலும் ஒரு அலுவலருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று பிரதேச செயலர் தெரிவித்தார்.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த குறித்த அலுவலர் கடந்த சனிக்கிழமை கொடிகாமம் சந்தைக்குச் சென்றவேளை அங்கு இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் பங்குபற்றியிருந்தார். இந்த நிலையிலேயே அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே பிரதேச செயலகத்தால் வழங்கப்படும் பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் அவசிய அவசர தேவையுள்ளவர்கள் பிரதேச செயலக வளாகத்தினுள் உள்நுழையாமல் சேவைகளைப் பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பிரதேச செயலர் மேலும் தெரிவித்தார்.

இந்தியப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய முடியாது!!

மாலியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!!