செய்திகள் பிரதான செய்தி

தெ.கிழக்காசிய நாடுகளில் மருத்துவ ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்

தென் கிழக்காசிய நாடுகள் 2030 இல் சுகாதார இலக்கை அடைவதற்கு தாதியர் மற்றும் மருத்துவ மாதுகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனாக விஸ்தரிக்கப்பட வேண்டுமென உலக சுகாதார அமைப்பு நேற்று (09) அறிவித்துள்ளது.

அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை தாதியர் மற்றும் மருத்துவமாதுகளால் மட்டுமே வழங்க முடியும் என்பதால் அவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதை அனைத்து தென் கிழக்காசிய நாடுகளும் உறுதி செய்ய வேண்டுமென்றும் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசிய பிராந்தியப் பணிப்பாளர் டொக்டர். பூனம் சிங் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நேற்று அவர் விடுத்துள்ளஅறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘தாதியர் மற்றும் மருத்துவமாதுகள் தொழிலாளர்களை பலப்படுத்துதல் மற்றும் ஆதரவு வழங்குதல்,’ எனும் தொனிப் பொருளில் நேற்று முன்தினம் உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

Related posts

கைதான சம்பிக்கவை சிசிடியில் சந்தித்த சஜித் குழு

G. Pragas

எமது காணியை மீட்டுத் தரும் வேட்பாளருக்கே ஆதரவு!

G. Pragas

கொரோனா தீவிரம்; ட்ரம்பினால் ட்ரில்லியன் கணக்கில் நிவாரண ஒதுக்கீடு!

Bavan