செய்திகள் பிந்திய செய்திகள்

தெரிவுக்குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது; அடம்பிடிக்கிறார் சிறிசேன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்ற தெரிவக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்தின்போது தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த தெரிவுக்குழுவின் அறிக்கையும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த அறிக்கையை தான் ஏற்க மாட்டேன் என்று கூறிய ஜனாதிபதி, அதை அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலாக பாதுகாப்பு குறைபாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆராயுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த தெரிவுக்குழு, தனது அறிக்கையை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

குறித்த அறிக்கையில், 250இற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, அரச புலனாய்வு சேவை மற்றும் அரசாங்கத் தலைவர்களை குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

G. Pragas

தமிழ் ஊடகவியலாளர் ஜனாதிபதி வேட்பாளர் ஆனார்

G. Pragas

தெற்காசியாவின் நட்சத்திரம் –2

Tharani