in ,

தெறிக்கவிட்ட சகிப்; மேஇ’யை சுறுட்டியெடுத்து வென்றது பங்களாதேஷ்!

சுற்றுலா மேற்கிந்திய – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் இன்று (20) பங்களாதேஷில் ஆரம்பமானது.

இதன்படி இன்று நடைபெற்று வரும் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்களினால் வென்றது.

போட்டியில் ஆறு அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய மேற்கிந்திய அணி பங்களாதேஷின் பந்தவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 32.2 ஓவர்களில் 122 ஓட்டங்களை மட்டும் பெற்று சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் கயில் மயேர்ஸ் (40) ஓட்டங்களையும், ரொவ்மன் பவள் (28) ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்ட சகிப் அல் ஹசன் 7.2 ஓவர்களை வீசி வெறும் 8 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஹசன் மஹ்முத் (28/3) விக்கெட்களை வீழ்த்தினார்.

17 மாதங்களுக்கு பின்னர் சர்வதேச அரங்கில் திரும்பிய முதல் போட்டியிலேயே சகிப் அல் ஹசன் அசத்தியுள்ளார். அது தொடர்பில் கருத்து தெரிவித்த சகிப், “இத்தனை மாதங்களுக்கு பின்னர் விளையாடுவது இலகுவானதல்ல. எனினும் தன்னால் சிறப்பாக செயற்பட முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக” குறிப்பிட்டார்.

இந்நிலையில் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷ் அணி 33.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்று பெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் (44), சகிப் அல் ஹசன் (19) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் அகேல் ஹொசைன் (26/3) விக்கெட்களை வீழ்த்தினர்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் தயாசிறி ஜயசேகர!

கறுவாக்கேணியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!