நேபாளத்தின் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழா (SAG) போட்டிகளின் முதல் நாளான இன்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கை அணி மூன்று தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை கப்பற்றி இதுவரை இந்த விளையாட்டுத் தொடரில் அதிக பதக்கங்களை வென்ற அணியாக முதலாம் இடத்தில் காணப்படுகின்றது.

