in ,

தெற்கு அதிவேக வீதியில் தொடராக 8 வாகனங்கள் விபத்து- வாகன நெரிசல்!

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் கடும் வாகன நெரில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களனிகம மற்றும் தொடங்கொட நகரங்களுக்கு இடையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த வாகன விபத்தினால் அதிவேக வீதியூடான மாத்தறைக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர், நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறுகின்றது.

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையில், இடைவெளியே பேணி பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மோ.சைக்கிளை இயக்கிய சிறுவன்; குழந்தை பலி! – மட்டுவிலில் சம்பவம்

இயக்கச்சி பற்றைக்குள் கேட்பாரற்று நின்ற கார் – தீவிர விசாரணை!