செய்திகள் விளையாட்டு

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியன்

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் 90வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட பெண்களிற்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியினர் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

இத் தொடர் நேற்று முன் தினம் (30) சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி மோதியது.

ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினர் 24:18 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

Related posts

சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா

G. Pragas

குளவி கொட்டுக்கு இலக்காகிய 7 பேர் வைத்தியசாலையில்

Tharani

பொது நிர்வாக அதிகாரிகளின் நாளைய வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

G. Pragas

Leave a Comment